Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சட்டமும் நீதியும்-2 வெப்தொடர் விமர் சனம்

ஒரு பார்ட்டியில் வழக்கறிஞர் வரலட்சுமியின் கணவரும், இன்ஸ்பெக்டருமான பிரேம் குமார் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுகிறார். அதை போலீசார் கவிதா பாரதி, ஆறு பாலா, ‘கல்லூரி’ வினோத், பீட்டர் ஜே.சந்திரன் செய்ததாக வழக்கு தொடரப்படுகிறது. நீதிமன்றத்தில் அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வரலட்சுமி வாதாடுகிறார். ஆனால், நால்வரும் குற்றமற்றவர்கள் என்று வாதாடுகிறார் வழக்கறிஞர் சரவணன்.

சுந்தரமூர்த்தி என்ற யதார்த்தமான வழக்கறிஞர் கேரக்டரில் சரவணன் பட்டையை கிளப்பி இருக்கிறார். இறுதியில் தனது வாதங்கள் தவறாகிவிட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் தவிக்கும்போது கலங்க வைக்கிறார். கதையின் திருப்புமுனையாக வரும் வழக்கறிஞர் வரலட்சுமி கம்பீரமாகவும், நேர்த்தியாகவும் நடித்துள்ளார். இன்ஸ்பெக்டர் கேரக்டரில் பிரேம் குமார் மற்றும் கவிதா பாரதி, ஆறு பாலா, ‘கல்லூரி’ வினோத், பீட்டர் ஜே.சந்திரன், லாவண்யா, ஷிவின், பாருல் சம்பாரியா, பவன் ஆகியோரின் கேரக்டர்களும் கவனத்தை ஈர்க்கிறது.

ஒரு வழக்கின் தீர்ப்பை மட்டும் மையப்படுத்தாமல், அதன் பின்னணியிலுள்ள மனிதர்கள், உணர்வுகள், சூழ்நிலைகளை ஆராய்வதை இயல்பான நீதிமன்ற காட்சிகளின் மூலம் பாலாஜி செல்வராஜ் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார். எஸ்.கோகுல கிருஷ்ணன் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கர் பின்னணி இசை, ஆர்.ஆதீஸ்வரன் எடிட்டிங், பிரதீப் மரியன் வசனம் தொடருக்கு பக்கபலமாக இருக்கின்றன. 6 எபிசோடுகள் கொண்ட இத்தொடர், இன்று முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.