Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மர்மம் நிறைந்த ‘ஆக்டோபஸ்’ வெப் தொடர்!

ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில், ஏழு அத்தியாயங்களைக் கொண்ட புதிய தொடராக ‘ஆக்டோபஸ்’உருவாகியுள்ளது. ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன், கலைவாணி பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இளம் பெண் ஒருவர் திடீரென காணாமல் போக, அவரைத் தேடும் முயற்சியில் அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர். அந்தத் தேடல், பல மறைக்கப்பட்ட உண்மைகளையும் எதிர்பாராத மர்மங்களையும் வெளிக்கொண்டு வருகிறது. நம்பிக்கை, உறவுகள், மனிதர்களின் உள்ளுணர்வு மற்றும் மன உறுதி ஆகியவற்றையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

ஊரடங்கு காலத்தில் இந்தக் கதையை எழுதியதாக இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி தெரிவித்துள்ளார். நாம் பார்க்கும் மனிதர்களும், உறவுகளும், சமூகமும் வெளிப்படையாகத் தெரிவதைவிட ஆழமான பல அடுக்குகளைக் கொண்டிருக்கலாம் என்ற கருத்தை மையமாக வைத்து இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மர்மம், உணர்வு மற்றும் மனித உறவுகளை இணைத்து உருவாகியுள்ள ‘ஆக்டோபஸ்’, பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.