Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஓடிடியில் சன்னி லியோன் படம்

கடந்த மூன்று வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த படம், ‘கென்னடி’. பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான அனுராக் காஷ்யப் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 20ம் தேதி வெளியாகிறது. தூக்கமின்மை பிரச்னையில் சிக்கிய முன்னாள் காவல் அதிகாரி ஒருவர், ஊழலை துணிச்சலுடன் எதிர்த்து போராடும் கதைக்களம் கொண்ட இது, கேன்ஸ் உள்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றது.

ராகுல் பட், சன்னி லியோன் நடித்துள்ளனர். கடந்த 2023ல் தயாரான இப்படம், சில நாடுகளில் ‘வீடியோ ஆன் டிமாண்ட்’ முறையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் சன்னி லியோன், அனுராக் காஷ்யப் பட ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.