Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஓடிடி தயாரிப்பாளர் சங்கம் உருவானது

சென்னை: தமிழ் திரையுலகில் தற்போது புது சங்கம் உருவாகியுள்ளது. இது தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் என்ற சங்கம் ஆகும். இந்த சங்கத்தின் கௌரவ தலைவராக ராதிகா மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜன்(சத்யஜோதி ஃபிலிம்ஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சங்கத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவங்கி வைத்த ராதிகா பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் பற்றி விமர்சித்திருந்தார். அவர் பேசுகையில், “டிஜிட்டல் மீடியா வளர்ந்த பிறகு இன்ஃப்ளூயன்சர், திரைப்படங்கள், சக கலைஞர்கள், பிரபலங்கள், அவர்களின் குடும்பங்களைப் பற்றி மோசமாக பேசுவது ரொம்பவே ஈஸியாக மாறிவிட்டது. அதற்கு காரணம் அவர்களை தட்டிக் கேட்க யாருமே இல்லை. அதை எதிர்த்து நான் உட்பட இன்னும் சில பேர் ஏற்கனவே குரல் கொடுத்திருக்கிறோம். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.