Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நான் எந்த ஆடை அணிந்தாலும் விமர்சிப்பதா? திஷா பதானி ஆவேசம்

மும்பை: பாலிவுட் நடிகை திஷா பதானி, தமிழில் சூர்யா ஜோடியாக ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் தன்னை பற்றி வெளியான விமர்சனங்களுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘ஒரு நடிகையாக எனது பயணத்தை சரியாக முன்னெடுத்து செல்கிறேன். பிரபலங்கள் என்றாலே, அதுவும் நடிகை என்றாலே விமர்சனங்கள் வருவது வழக்கம். ஆனால், எனக்கு எதிராக ஒரு கூட்டம் தவறாக செயல்பட்டு வருகிறது.

நான் என்ன செய்தாலும், தாறுமாறாக விமர்சிப்பவர்களை பற்றி என்ன சொல்வது? எந்த விமர்சனமும் என்னை கட்டுப்படுத்தாது. விமர்சனங்களை எளிதாக கடந்து செல்வதே நல்லது. ஆனால், நகரவே முடியாத அளவுக்கு தனி மனித தாக்குதலாக விமர்சனங்கள் இருந்தால், அதை எப்படி எதிர்கொள்வது? நான் என்ன உடை அணிந்தாலும், அதற்கு ஒரு காரணம் கண்டுபிடித்து கண்டபடி விமர்சிக்கின்றனர்.

அலங்கார உடைகள் விஷயத்தில் இதுபோன்ற தாக்குதல் தொடுப்பவர்களை திருத்த முடியாது. நான் யாருடன் பேசினாலும், பழகினாலும், அதற்கு திட்டமிட்டு ஒரு கதையை எழுதுகின்றனர். மற்றவர்களின் குறைகளை மட்டுமே பேசி திரிபவர்களை எப்போதுமே திருத்த முடியாது. அவர்களாக திருந்தினால் மிகவும் நல்லது. நல்ல விமர்சனங்களையும், அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்றார்.