Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பால் டப்பாவின் ஏரோபிளேன்

சென்னை: ராப் இசை கலைஞர், பாடகர், பாடலாசிரியர், நடிகர், என பன்முக ஆளுமை திறன் படைத்த பால் டப்பா சுயாதீன இசை உலகில் மிக முன்னணி இசைக்கலைஞராக உயர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் பாடல் எழுதி, பாடி, நடித்த ‘ஏரோபிளேன்’ எனும் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை திங்க் இன்டி மியூசிக் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ ஆல்பத்தில் பால் டப்பா மற்றும் நடிகை அனன்யா ராம் பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் ராகுல் அசோக் குமார் இயக்க, இசையமைப்பாளர் அடியேல் மஸார் இசையமைக்க, பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘காதல் வேணாம்னு சொன்னா காதல் பண்ண சொன்னாயே..’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை பால் டப்பா எழுதி, பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் ஆகாய விமானத்தின் பயணிகளாக பிரேக்கப்பிற்குப் பிறகு காதலர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். அவர்களின் காதல், நினைவலைகளாக இசையுடன் தொடர்ந்து பயணிக்கிறது. இப்பாடல் யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.