Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாரடைஸ் விமர்சனம்

செகந்திராபாத் அருகில் உள்ள பாரடைஸ் என்ற பகுதியில் சவாரி என்ற எந்தவொரு அடையாளமும் இல்லாத பழங்குடி இனம் உள்ளது. ஷிகஞ்சா மாலிக் (மோகன் பாபு) மற்றும் அவரது மகன் ராகவ் ஜூயலை குற்ற செயல்களில் ஈடுபடுத்திக்கொள்கிறனர். அந்த பழங்குடி இனத்தின் தலைவன் ஜடல் (நானி), மோகன் பாபு மற்றும் அவனது ஆட்களை எதிர்த்து போராடும் நிலைக்கு சவாரி இன மக்களை எவ்வாறு கொண்டு வந்தார், அதில் எப்படி வெற்றி பெற்றார் என்பதே கதை.

புதிய மாஸ் அவதாரம் எடுக்க நினைத்த நானியும், தனி எமோஷ்னல் உலகத்தை உருவாக்க நினைத்த இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேல்லாவும் ரசிகர்களை பெரிதாக ஏமாற்றவில்லை. தாய் சோனாலி குல்கர்னி, மகன் நானிக்கு இடையேயான செண்டிமென்ட் காட்சிகள் பல இடங்களில் நமக்கு ஒட்டவில்லை. 4 முக்கிய அதிரடி சண்டை காட்சிகளில் எண்ணை சட்டியில் விழுவது, தலைகள் துண்டு துண்டாக விழுவது, பிரசவமான பெண்ணுக்கு கரண்ட் ஷாக் கொடுப்பது என மிகவும் வன்முறையான காட்சி அமைப்புகள் நம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

காதல், கவர்ச்சி என கயாடு லோஹர் தனது பங்கினை சிறப்பாக செய்துள்ளார். ராகவ் ஜூயல், மோகன் பாபு இருவரும் வில்லன் வேடங்களில் பொருந்துகிறார்கள். அனிருத் இசை ஒவ்வொரு காட்சியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. பாடல்கள் அதிரடி, சரவெடி. 1980களின் செட்டப்பை அப்படியே கண்முன் நிறுத்தும் ஆர்ட் வொர்க்கும், ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பிளஸ். லாஜிக் மீறிய ஆக்‌ஷனை விரும்பும் ரசிகர்களுக்கு கரம் மசாலாவாக இருக்கிறது இந்த பாரடைஸ்.