Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சலித்ததால் பிரிந்தோம் மிஸ் பண்ணியதால் இணைந்தோம்: லிசி பற்றி பிரியதர்ஷன்

சென்னை: முன்னணி இந்திய இயக்குனர்களில் ஒருவர் பிரியதர்ஷன். இவர் பிரபல நடிகை லிஸ்ஸியை 1990இல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கல்யாணி என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன் நடிகையாக இருக்கிறார். 2016ஆம் ஆண்டு பிரியதர்ஷன், லிசி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர், சமீபத்தில் இந்த தம்பதி இணைந்து வாழத் துவங்கியுள்ளனர்.

இது குறித்து பிரியதர்ஷன் கூறியபோது, ‘‘நாங்கள் இணைந்து 32 வருடங்கள் வாழ்ந்திருக்கிறோம். அதில் ஒரு சலிப்பும், ஈகோவும் வந்தது. என்னால் நீயா, உன்னால் நானா? என்ற ரீதியிலான ஈகோ. அது ஒரு கசப்பான உறவாக மாறியது. அதனால் நாங்கள் இருவரும் பிரிய முடிவெடுத்தோம். ஆனால் சில வருடங்கள் கடந்த பிறகு, ஒருவரை ஒருவர் மிஸ் செய்வதை உணர்ந்தோம். எனவே மறுபடி இணைந்துவிட்டோம், அவ்வளவுதான்’’ என்றார்.