Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சமந்தாவை பாராட்டிய பார்வதி

கொச்சி: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா, மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இவரது நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த சிட்டாடெல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இதில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவர்ச்சியான காட்சிகளிலும் நடித்திருந்தார். இது அவரை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டு வந்தது.

இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி திருவோத்து, சிட்டாடெல் தொடரில் சமந்தாவின் நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பார்வதி பகிர்ந்திருப்பதாவது, “நான் நினைத்ததை விட அதிகம் பிடித்திருந்தது. ஏஜென்ட் ஹனி, நீங்கள் ஒரு ஃபயர் ஸ்டார்ட்டர். ஆக்‌ஷன் காட்சிகளில் உங்களை பார்ப்பது செம்ம ட்ரீட்டாக இருந்தது” என குறிப்பிட்டிருந்தார்.

இவரது பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமந்தா பகிர்ந்து பார்வதிக்கு நன்றி தெரிவித்தார். தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவை சமீபத்தில் பாராட்டியிருந்த பார்வதி, இப்போது சமந்தாவை அவரது நடிப்புக்காக பாராட்டியுள்ளார். இதுபோல் ஆண்களால் பாதிக்கப்படும் நடிகைகளுக்கு பார்வதி ஏதோ ஒரு வகையில் ஆதரவுக்கரம் நீட்டுவதாக நெட்டிசன்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.