சென்னை: திரு அருள் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம், ‘அமரம்’. நிர்மலா ராஜன் வழங்கும் திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் சி.ஆர்.ராஜன் தயாரித்துள்ளார். மூன்று காலக்கட்டங்களில், மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் அமரத்துவ காதல் கதையாக உருவாகியுள்ள இதில், ‘செயல்’ தேஜஸ் ராஜன், ஐரா அகர்வால், ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரீஷ் பெராடி, வாசுதேவன் முரளி நடித்துள்ளனர்.
மிக்கி ஜெ.மேயர் இசையில் சினேகன், சவுந்தரராஜன்.கே பாடல்கள் எழுதியுள்ளனர். பரத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இப்படத்தை வரும் 28ம் தேதி திரைக்கு வெளியிடுகிறார். படம் குறித்து திரு அருள் கிருஷ்ணன் கூறுகையில், ‘டிரைடெண்ட் ரவீந்திரன் பார்த்துவிட்டு சொல்லும்போது,
தமிழில் ஹிட்டான ‘புதிய பாதை’, ‘சுப்ரமணியபுரம்’, ‘பருத்திவீரன்’ போன்ற படங்களின் வரிசையில் ‘அமரம்’ படமும் வரும் என்றார். இந்த கதை, மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை பற்றி பேசும். பலர் தங்களின் சம்பளத்தை எதிர்பார்க்காமல் பணியாற்றினர்’ என்றார். ஐரா அகர்வால் கூறும்போது, ‘திரையில் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுத்த இயக்குனருக்கு மிகவும் நன்றி’ என்றார்.
