Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமானியை கரம்பிடித்த ஜனனி

சென்னை: தமிழில் ‘அவன் இவன்’, ‘தெகிடி’, ‘அதே கண்கள்’, ‘பலூன்’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் ஜனனி. கடந்த ஆண்டு பரத் ஜோடியாக ‘இப்படிக்கு காதல்’, கலையரசனுடன் ‘ஹாட்ஸ்பாட்’ ஆகிய படங்களில் நடித்த அவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாய் ரோஷன் ஷாம் என்ற துபாயை சேர்ந்த விமானியுடன் ஜனனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் சாய் ரோஷன் ஷாம், ஜனனி தம்பதிக்கு மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். இதன் போட்டோக்களை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஜனனி.