Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹீரோவாக நடிக்கும் போலீஸ் பயிற்சி நாய்

சென்னை: தங்களுக்கு அநியாயம் நடந்தால், அதற்கான நியாயம் கேட்டு மனிதர்கள் கோர்ட்டுக்குச் சென்று போராடுவது வழக்கம். தற்போது உருவாகியுள்ள ‘கூரன்’ என்ற படத்தில், ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க கோர்ட்டில் போராடுகிறது. போலீசாரிடம் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற நாய் ஹீரோவாக நடித்துள்ளது. மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் நடித்துள்ளனர்.

உக்ரைனில் மருத்துவம் படித்த நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். இதற்கு முன்பு அவர் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். எடிட்டர் பி.லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். மார்ட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். விக்கியின் கனா புரொடக்‌ ஷன்ஸ், வி.பி கம்பைன்ஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன.