Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆபாச தளமா நடத்துகிறேன்? அபிராமி ஆவேசம்

சென்னை: நடிகை அபிராமி வெங்கடாசலத்துக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். தற்போது அவர் சப்ஸ்கிரிப்ஷனை தொடங்கி அதில் ஸ்பெஷல் போட்டோக்களை போட தொடங்கி இருக்கிறார். வழக்கமாக சில நடிகைகள் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் பணம் பெற்று ஆபாசமான புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். ‘ஜெமினி’, ‘அன்பே சிவம்’, ‘வின்னர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை கிரண் அதில் ஒருவர்.

இந்நிலையில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவார் என பணம் கட்டிவிட்டு எதிர்பார்ப்பில் இருப்பவர்களுக்கு அபிராமி வெங்கடாச்சலம் ஒரு பதிவை போட்டிருக்கிறார். ‘‘நான் ஆபாசமாக போட்டோ எல்லாம் போடமாட்டேன். நான் ஆடை இல்லாமல் போட்டோ போடுவேன் என எதிர்பார்த்து சப்ஸ்கிரைப் செய்திருந்தால் உடனே அன்சப்ஸ்கிரைப் செய்துவிடுங்கள். இது ஆபாச தளம் அல்ல’’ என அவர் பதிவிட்டு இருக்கிறார்.