பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு பகுதி-1!
ஜோதி கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் 17ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்ஷன்- அட்வென்ச்சர் படமாகும். ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் புகழ்பெற்ற ஹரி ஹர வீர மல்லுவின் கதைதான் இது. சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்றவற்றை பிரமாண்டமான பட்ஜெட்டில் செட் உருவாக்கியுள்ளனர். சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்ட இவை அனைத்தும் பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.
புகழ்பெற்ற ஹாலிவுட் ஆக்ஷன் டிரைக்டர் நிக் பாவெலின் இயக்கத்தின் கீழ் 400-500 ஸ்டண்ட்மேன்கள் மற்றும் கூடுதல் கலைஞர்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடிகர் பவன் கல்யாண் ரிஸ்க் எடுத்து செய்த ஆக்ஷன் காட்சிகள் நிச்சயம் பாராட்டு பெறும். படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வார இறுதியில் விஜயவாடாவில் கடைசி ஷெட்யூல் நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. இறுதிக்கட்டத்தில் பவன் கல்யாண் மற்றும் 200 கலைஞர்கள் பங்கேற்கும் மற்றொரு பிரமாண்டமான ஆக்ஷன் காட்சி இதில் இடம்பெறும். அதன் பிறகு படப்பிடிப்பு முடிவடையும். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் மார்ச் 28, 2025ல் வெளியாகும்.
