Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிஆர் குழுக்களால் நடிகைகளுக்கு பாதிப்பு: ராசி கன்னா திடீர் புகார்

மும்பை: திரையுலகில் நடிகர், நடிகைகளை பிரபலப்படுத்த பிஆர் என்ற கலாசாரம் பரவலாக காணப்படுகிறது. அந்த பிஆர் மூலம் ஒருதரப்பினர், மற்றொரு தரப்பினரின் திரைப்பயணத்தை பாதிக்கும் விதத்தில் செயல்படுகின்றனர். இதுகுறித்து ராசி கன்னா பரபரப்பாக புகார் கூறியுள்ளார். அது வருமாறு: இப்போது திரைத்துறையில் பிஆர் குழுக்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது.

சோஷியல் மீடியாக்களில் ஒரு ஹைப்பை உருவாக்கி, சிறிய நடிகர்களையும் பெரிய ஸ்டார்களாக மாற்றும் சக்தி அதற்கு இருக்கிறது. ஆனால், பிஆர் மூலம் கிடைக்கும் புகழ் தற்காலிகமானது மட்டுமே. உண்மையான கவுரவம் என்பது நமது வேலை, உழைப்பு, திறமை ஆகியவற்றின் மூலமே கிடைக்கும். அது பிஆர் உருவாக்கும் ஹைப்பால் மட்டுமே கிடைக்காது. என்னிடம் தனியாக பிஆர் குழு இல்லை. என் திறமை மற்றும் கடுமையான உழைப்பின் மீது அதிக நம்பிக்கை வைத்து செயல்படுகிறேன்.