Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அனிமேஷன் வீடியோவுக்கு டப்பிங் பேசிய பிரபாஸ்

ஐதராபாத்: மிகச்சிறந்த நடிப்புக்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றிருந்த ‘மகாநடி’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கியவர், நாக் அஸ்வின். தற்போது அவர் இயக்கியுள்ள சயின்ஸ் பிக்‌ஷன் படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்பட பலர் நடித்துள்ளனர்.

பிரமாண்டமான முறையில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் பான் இந்தியா படமான இதன் அனிமேஷன் அறிமுக வீடியோ ஒன்று ஓடிடியில் வெளியாகிறது. இதற்கு பிரபாஸ் டப்பிங் பேசியுள்ளார். இப்படத்தில் நாக் அஸ்வின் உருவாக்கியுள்ள சயின்ஸ் பிக்‌ஷன் உலகத்தைப் பற்றிய அறிமுகத்தை இந்த வீடியோ தொகுத்து வழங்குகிறது. இதன் டிஜிட்டல் பிரீமியரில், ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் கேரக்டர்கள் குறித்து அறிமுகம் செய்யப்படுகிறது.

முன்னணி ஹீரோ ஒருவர் அனிமேஷன் அறிமுக வீடியோவுக்கு டப்பிங் பேசியிருப்பது இதுவே முதல்முறை. புராணக் கதைகளின் அடிப்படையில், எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக ‘கல்கி 2898 ஏடி’ உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சான் டியாகோ காமிக்-கானில் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.