Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரபு இராமானுஜம் இயக்கத்தில் கருப்பட்டி

சென்னை: முழுநீள ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக ‘கருப்பட்டி’ உருவாகியுள்ளது. மோனிதா மூவிஸ் சார்பில் தயாரித்து, கருப்பட்டி என்ற கேரக்டரில் பொழிச்சை சி.ராஜ்குமார் நடித்துள்ளார். விஜயராஜ், சமந்து, ஹரிணிதா, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கிளி ராமச்சந்திரன், சித்திரகுப்தன், ரமேஷ், கலைவாணி, ரஷீத் சத்யராஜ், செண்பகவள்ளி நடித்துள்ளனர்.

‘காதல் பதிவு’, ‘நந்திவரம்’, ‘சினிமா கனவுகள்’, ‘கொலை தூரம்’ ஆகிய படங்களை இயக்கிய பிரபு இராமானுஜம், ‘கருப்பட்டி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். செந்தில் மாறன், கவிநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இசை அமைத்து டி.எஸ்.திவாகர் எடிட்டிங் செய்ய, இஜாஸ் அகமது பாடல்கள் எழுதியுள்ளார். ராம் முருகேஷ் நடனப்பயிற்சி அளிக்க, ரமேஷ் சண்டைக்காட்சி அமைத்துள்ளார். சேலம், மேட்டூர், செஞ்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.