Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரசாந்த் படத்தில் தேவயானி மகள்

கோலிவுட்டின் ‘டாப் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், பிரசாந்த். தனது தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கத்தில் ‘அந்தகன்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் நடிக்கும் படத்துக்கு ‘ரஞ்ஜன்’ என்று பெயர் சூட்டியுள்ளார். இதை தியாகராஜன் இயக்க, சாந்தி தியாகராஜன் தயாரிக்கிறார். தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசனின் மகன் ஹரி முக்கிய வேடங்களில் அறிமுகமாகின்றனர்.

இப்படம் தெலுங்கில் 5 கோடி ரூபாய் தயாரிப்பில் வெளியாகி, 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த ‘கோர்ட்’ என்ற படத்தின் ரீமேக். நேற்று சென்னையில் 53வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பிரசாந்த், தனது புதுப்படத்தின் டைட்டிலை அறிவித்தார். ‘ரஞ்ஜன்’ என்றும், டேக்ைலனாக ‘தி அட்வகேட்’ என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. இதற்கு முன்பு பிரசாந்த், தேவயானி இணைந்து நடித்தனர். தற்போது பிரசாந்த் நடிக்கும் படத்தில், தேவயானியின் இளைய மகள் பிரியங்கா ராஜகுமாரன் ஹீரோயினாக நடித்துள்ளார். தேவயானியும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.