Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டென்ஷனில் தவிக்கும் பிரீத்தி முகுந்தன்

கடந்த 2024ல் தெலுங்கில் வெளியான ‘ஓம் பீம் புஷ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், பிரீத்தி முகுந்தன். பிறகு கவினுடன் இணைந்து ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்தார். இசை அமைப்பாளர் சாய் அப்யங்கரின் ‘ஆச கூட’, டீஜே அருணாசலத்தின் ‘முட்டு மு2’ ஆகிய இசை ஆல்பங்களில் நடித்திருந்த அவர், விஷ்ணு மன்ச்சுவின் ‘கண்ணப்பா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து பிரபலமானார். மலையாளத்தில் ‘மைனே பியார் கியா’, ‘சர்வம் மாயா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தமிழில் ஹரீஷ் கல்யாணுடன் ‘தாஷமக்கான்’, அர்ஜூனுடன் ‘பிளாஸ்ட்’, தெலுங்கில் ‘எமோ எமோ இடி’ ஆகிய படங்களில் நடிக்கும் அவர், அடுத்து கார்த்திக் ஆர்யனுடன் ‘நாக்ஸில்லா’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இதை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. அமானுஷ்ய காமெடி கதையுடன் உருவாகியுள்ள இப்படம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தவிர்க்க முடியாத பிரச்னைகளால் வௌியாகவில்லை.

இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாம்பு தொடர்புடைய படம் என்பதால், ராட்சத பாம்பு தொடர்பான கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக அமையாததால், அப்பணிகள் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து பணிகளும் நடந்து வருவதால், படம் திரைக்கு வர காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது. இதனால் பிரீத்தி முகுந்தன் டென்ஷனில் இருக்கிறார்.