அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் முதல்முறையாக சேர்ந்து நடித்துள்ள படம் ‘அன்பில் அவன்’. வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் டைரக்ட் செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். அசோக் செல்வனின் 23வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘போர் தொழில்’ இயக்குனர் விக்னேஷ் ராஜா கதையை எழுதியுள்ளார். ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை அசோக் செல்வன் தயாரித்துள்ளார். ரொமான்ஸ் கலந்த ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ படத்தில் இதுவரை இல்லாத வகையில் மாறுபட்ட வேடத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.
குறிப்பாக ஒரு ஆக்ஷன் காட்சிக்காக 70 அடி உயரத்தில் இருந்து எந்தவித பாதுகாப்பு உபரகரணமும் இல்லாமல் குதித்துள்ளார் அசோக் செல்வன். இதன் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. சண்டை காட்சிகளுக்கு பிரபல சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் கலந்து உருவாகியுள்ள இப்படம், அசோக் செல்வனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 25ம் தேதி வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
