Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கர்ப்பமாக இருந்த கியாராவை பார்த்து பயமாக இருந்தது: யஷ்

மும்பை: மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில், வரும் 26ம் தேதி திரைக்கு வரும் பான்வேர்ல்ட் படம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’. இதில் இரட்டை வேடங்களில் யஷ் நடித்துள்ளார். ஹீரோயின்களாக கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா, ஹுமா குரேஷி நடித்துள்ளனர். இப்படம் சம்பந்தமாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யஷ் பேசியதாவது:

கியாரா அத்வானி நேர்த்தியான மற்றும் அற்புதமான நடிகை. இதில் அவர் நடிக்கிறார் என்று தெரிந்தபோது பதற்றம் அடைந்தேன். காரணம், அதிக பணிச்சுமை இருக்கும். நடிப்புக்கான அர்ப்பணிப்பையும் கேட்கும். முதல்முறை கியாரா அத்வானியிடம் நான் பேசியபோது, ‘நீங்கள் மழை காட்சிகளில் நடித்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

‘இல்லை’ என்றேன். அவரது கடுமையான உழைப்பை பார்த்து வியந்தேன். அவர் கர்ப்பமாக இருந்தபோது கூட, 100 சதவீத அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். நானும், கீது மோகன்தாசும் அதிக பதற்றத்துடன் இருந்தோம். கியாரா அத்வானியை பாதுகாக்க, பவுன்சர்களை போல் விழிப்புடன் செயல்பட்டோம். எதை பற்றியும் கவலைப்படாத கியாரா அத்வானி, தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடித்தார்.