Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரஷர் குறித்து யோசிக்காத ஜான்வி கபூர்

எந்த விஷயமாக இருந்தாலும், அதுபற்றி வெளிப்படையாக பேசுபவர் ஜான்வி கபூர். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘ஒரு நடிகையாக எனக்கு சவால்விடும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் எப்போதும் ரசிப்பேன். நமக்கு பழக்கம் இல்லாத வித்தியாசமான கேரக்டர்களில் சோதனை முயற்சிகளை செய்யும்போதுதான், அது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரையுலக வாழ்க்கையிலும் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது எனக்குள் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

இந்த வேலையிலேயே எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், நம்முடைய கம்ஃபோர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து புதிய விஷயங்களை எக்ஸ்ப்ளோர் செய்வதுதான். நாம் உண்மையில் யார் என்பதை தெரிந்துகொள்ளும் அந்த நேரத்தில்தான், ஒரு கலைஞராக இன்னும் வளர முடியும். திரைத்துறையில் இருக்கும் பிரஷர் குறித்து அதிகமாக யோசித்து கொண்டிருக்காமல், எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். இதை நான் ஒரு அழுத்தமாக பார்க்காமல், எனது பொறுப்பாகவே பார்க்கிறேன்.

நடிகர்களாகிய நமக்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்புக்கு நாம் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும். நாம் எந்தவொரு வேலையை செய்தாலும், நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நம்முடைய மிகச்சிறந்த பங்களிப்பை அள்ளி தருவது நம்முடைய கடமை’ என்று தெரிவித்துள்ளார்.