Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தனியார் டிவி சேனலுக்கு ரூ.34.65 கோடிக்கு வணிக வளாகத்தை விற்ற விஜய்

சென்னை: தனக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்றை ரூ.34 கோடியே 65 லட்சத்துக்கு நடிகர் விஜய் விற்பனை செய்துள்ளார். இந்த சொத்தை தனியார் டிவி சேனல் ஒன்று வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சினிமா வட்டாரத்தில் பேசப்படும் தகவல்: விஜய்க்கு சென்னை அண்ணா நகர் மேற்கு, திருமங்கலம் அருகே வணிக வளாகம் ஒன்று சொந்தமாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த சொத்தை விஜய், தனியார் டிவி சேனல் உரிமையாளர்களில் ஒருவருக்கு விற்றுள்ளார்.

அந்த நபர், ரூ.34 கோடியே 65 லட்சத்துக்கு இந்த வணிக வளாகத்தை வாங்கியிருக்கிறார். இப்போது இந்த இடத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு அந்த தனியார் டிவி சேனல் திட்டமிட்டுள்ளது. கட்சி பணிகளுக்காக விஜய் தனது சொந்த பணத்திலிருந்து இதுவரை ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்து பிரசார கூட்டங்கள், கட்சிப் பணிகள் உள்ளிட்டவை செயல்படுத்த நிதி தேவைப்படுவதால், விஜய்க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அதனாலேயே அவர் இந்த வணிக வளாகத்தை விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.