Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாங்காய் சாப்பிடும் பிரியங்கா சோப்ரா

பான் ேவர்ல்ட் படமாக எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ‘வாரணாசி’ என்ற படத்தில், மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, தற்போது ஐதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். அங்கு பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டுகிறது. தினமும் 35 டிகிரியை கடந்து வெப்பநிலை நீடிக்கிறது.

கடந்த ஞாயிறு அன்று படப்பிடிப்பு இல்லாததால், அன்றைய தினம் ஓட்டல் நீச்சல் குளத்தில் தனது தோழியுடன் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்த சில போட்டோக்களை பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ளார். நீச்சலுக்கு இடையே, மிளகாய் பொடி தூவிய மாங்காய் துண்டுகளை அவர் சாப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த ஞாயிறு, உண்மையிலேயே ஒரு சூப்பரான ஞாயிறாக உணர்ந்த தருணம் இது’ என்றார்.