Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரியங்கா மோகனுக்கு கிடைத்த புதிய கவுரவம்

தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் பிரியங்கா மோகன், ஓடிடியில் நேரடியாக வெளியான ‘மேட் இன் கொரியா’ என்ற படத்தில் நடித்ததால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். இப்படம் தென்கொரிய நாட்டை கதைக்களமாக வைத்து உருவானது. தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் கடந்த ஏப்ரலில் இந்தியாவுக்கு வந்திருந்தபோது, ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்தில் பிரியங்கா மோகனும் பங்கேற்றார். தற்போது அவர் தென்கொரிய நாட்டின் சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த அற்புதமான கவுரவத்துக்கு மனமார்ந்த நன்றி. தென்கொரிய சுற்றுலாவின் கவுரவ தூதராக நியமிக்கப்பட்டது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தென்கொரிய கலாசாரத்தை இந்திய பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்க உதவக்கூடிய ஒருவராக என்னை அங்கீகரித்த தென்கொரிய அரசாங்கத்துக்கும், சுற்றுலா அமைப்புக்கும் நன்றி.

தென்கொரியாவின் கலாசாரம், பாரம்பரியங்கள், அதன் அன்பான உபசரிப்பு ஆகியவை எனக்கு எப்போதுமே உத்வேகம் அளித்துள்ளன. இந்த அற்புதமான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நம்பிக்கை, கருணை மற்றும் அன்பான வரவேற்பு அளித்த தென்கொரிய சுற்றுலா அமைப்பின் தலைவருக்கு நன்றி. இனிமேல் நடக்கும் நல்ல சம்பவங்கள் அனைத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’ என்றார்.