சென்னை: கிரிஞ்ச் ஃபயர் புரொடக்ஷன் சார்பில் வி. பிரியா தயாரித்து, வினய் நாராயணன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘பித்தன்’. ஒளிப்பதிவு - சங்கர் செல்வராஜ். இசை - எஸ்.பி. பூபதி. எடிட்டர் - சி.எஸ். பிரேம்குமார். சண்டை பயிற்சி - பிரதீப் தினேஷ். நடனம் - தினேஷ். பாடல்கள் - சினேகன், மெட்ராஸ் மிரான். கதாநாயகன் மைம் கோபி, கதாநாயகி அறிமுகம் சினேகா, ஆடுகளம் முருகதாஸ், ஆர்யன், கூல்சுரேஷ், கல்கி மற்றும் பலர் நடிக்கிறார்கள். டைரக்டர் வினய் நாராயணன் படத்தை பற்றி கூறும்போது, ‘‘கதையின் நாயகன் டூவீலர் மெக்கானிக். தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். திடீரென புயல் போல் ஏற்பட்ட பிரச்னையால் தன் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு குடி பெயர்ந்த நிலையில் போலீஸ் மற்றும் ரவுடிகள் நாயகனை அங்கெங்கே தேட காரணம் என்ன என்பதை விறுவிறுப்பாக திரைக்கதை மூலம் உருவாக்கியுள்ளேன்’’ என்றார். இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படக்குழுவினருக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் தீபாவளி வாழ்த்துக்களை தயாரிப்பாளர் தெரிவித்தார்.
+
