Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தயாரிப்பாளருக்கு லாபம் தரும் ஹீரோ: விமல் விருப்பம்

சென்னை: மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராஜசேகர் தயாரிக்க, கேந்திரன்.வி எழுதி இயக்கியுள்ள படம், ‘வடம்’. வரும் 6ம் தேதி திரைக்கு வரும் இதில் விமல், நட்டி நட்ராஜ், சனாஷ்கா ஸ்ரீ, முனீஷ்காந்த், பாலசரவணன், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதன ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், சரவண சக்தி, மூர்த்தி, கே.பி.ஜெகன் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் பாண்டி முனி என்ற மாடு நடித்துள்ளது. பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். சாபு ஜோசப் எடிட்டிங் செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு என்ற கிராமிய வீரவிளையாட்டு பின்னணியில் படம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து விமல் கூறுகையில், ‘மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களில், இமான் இசையில் உருவான ‘பாண்டி முனி’ பாடலையே ஒலிக்கவிடுகின்றனர். இப்படத்துக்கு அவர் பின்னணி இசையால் உயிரூட்டி இருக்கிறார். எனக்கு மாஸ் ஹீரோ பட்டம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். என் சக்தி என்ன என்று எனக்கு தெரியும். கடைசிவரை ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பி பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும்’ என்றார். இமான் கூறும்போது, ‘தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனி பாடலின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆணாதிக்கம் கொண்ட இவ்வுலகில், பெண்களுக்கு ஒரு முழு பாடலை வழங்குவது குறைந்துவிட்டது. அது கதை எழுதும்போதே இடம்பெற்றால்தான் திரையில் வரும். அப்படி ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குனர் சொல்லும்போது, நாங்களும் அப்படி ஒரு பாடலை கொடுக்க முடியும்’ என்றார்.