ஆண், பெண் கலைஞர்களுக்கு ஒரே மாதிரி சம்பளம் பாலின பாகுபாட்டை உடைத்த தயாரிப்பாளர் சமந்தா
சென்னை: நடிகர்களை போல நடிகைகளுக்கும் சம்பளம் அதிகம் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் சமந்தா. கடந்த 2023ம் ஆண்டு திரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை சமந்தா தொடங்கினார். அதில் முதல் திரைப்படமாக ‘பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்து வருகிறார். நந்தினி ரெட்டி இயக்கும் இந்த படத்தில் நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் ஒரு பேட்டியில், தயாரிப்பாளராக நடிகை சமந்தா பாலின பாகுபாடி இன்றி சம்பளம் வழங்கி இருப்பதாக கூறியுள்ளார். அதாவது, இதில் பணியாற்றும் நடிகர்களுக்கு தரும் சம்பளமே நடிகைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாம். அதேபோல் ஆண் டெக்னீஷியன்களுக்கு என்ன சம்பளமோ அதே சம்பளத்தை பெண் டெக்னீஷியன்களுக்கும் வழங்கியிருக்கிறார் சமந்தா. இந்திய சினிமாவிலேயே இப்படி ஒரு முன்னெடுப்பை இதுவரை யாரும் செய்ததில்லை நந்தினி ரெட்டி தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த செயலுக்கு சோஷியல் மீடியாவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
