லண்டனை சேர்ந்த டன்ஸ்டன் இண்டர்நேஷனல் தயாரிக்கும் தமிழ்ப் படத்தில், இந்த கம்பெனியின் நிறுவனர் துஷாந் ஹீரோவாக நடிக்கிறார். ‘வட்டக்கானல்’ பித்தாக் புகழேந்தி எழுதி இயக்குகிறார். அவரது திரைக்கதையால் ஈர்க்கப்பட்ட படக்குழுவினர், உடனே அவரை இயக்குனராக தேர்வு செய்தனர். பிரமாண்டமாக உருவாக்கப்படும் இப்படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. வரும் டிசம்பரில் கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
+
