Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கதையின் நாயகனாக மாறிய விநாயகராஜ்

திரைக்கு வந்த ‘லாக் டவுன்’ என்ற படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்து, படக்குழுவினர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவர் விநாயகராஜ். ‘திருப்பதி’, ‘ஆஞ்சநேயா’, ‘சிகரம் தொடு’, ‘புலி வருது’, ‘மாமனிதன்’, ‘திருவின் குரல்’, ‘பீட்சா 3’, ‘லைன்மேன்’ ஆகிய படங்களில் வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் தனது திறமையை நிரூபித்திருந்த அவர், ‘லாக் டவுன்’ படத்தில் டாக்டர் வேடத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘உயிரிலே கலந்தது’ என்ற படத்தின் டைரக்டர் கே.ஆர்.ஜெயா இயக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் விநாயகராஜ், விரைவில் அப்படம் குறித்து அறிவிக்கிறார்.