Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பஞ்சாபி நடிகை சாரா குர்பாலுக்கு பாலியல் கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசில் புகார்

மும்பை: பஞ்சாபி நடிகை சாரா குர்பால், சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தொகுத்து வழங்கிய டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். அப்போது சக போட்டியாளரான பிரியங்கா சாஹர் சவுத்ரி என்பவருடன், குரல் வளம் மற்றும் கருத்து ரீதியாக கடுமையான வாக்குவாதம் முற்றி மோதல் வெடித்தது. பிறகு அந்த போட்டியில் இருந்து சாரா குர்பால் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரது உடலமைப்பு குறித்து அருவெறுப்பான ஆபாச கருத்துகளை பதிவிட்ட சிலர், தொடர்ந்து அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாலியல் மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்து அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாரா குர்பால், இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபட்ட சில சமூக விரோதிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘எனது கருத்துகளுடன் நீங்கள் முரண்படலாம். அதற்காக எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாலியல் மிரட்டல் விடுப்பதும், கொச்சையாக விமர்சிப்பதும் மன்னிக்க முடியாத வெட்கக்கேடான செயலாகும். இதுபோன்ற கோழைத்தனமான நபர்கள் தப்பவே முடியாது’ என்று எச்சரித்துள்ளார். தவிர, இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ள அவர், அந்த விஷமிகள் மீது கடுமையான சட்ட நட

வடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.