Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வாங்கியது ரூ.17 கோடிக்குதான் மகாராஜா ரூ.150 கோடி வருவாய்: அசத்திய நெட்பிளிக்ஸ்

சென்னை: ஆக்‌ஷன் திரில்லராக வெளியானது மகாராஜா திரைப்படம். நித்திலன் சாமிநாதன் இப்படத்தினை எழுதி, இயக்கி இருந்தார். விஜய் சேதுபதியுடன் அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, அபிராமி, நட்ராஜ், சிங்கம் புலி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஜூலை 12ம் தேதி மகாராஜா படத்தை தமிழ், இந்தி உட்பட சில மொழிகளில் வெளியிட்டது. தியேட்டர்களில் வெளியாகி ரூ.40 கோடி வரை வசூலித்த இப்படம் ஓடிடியில் அதைவிட நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் மகாராஜா 25 மில்லியன் பார்வைகளைத் தாண்டி பெற்றது. இந்த படத்தினை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.17 கோடிக்கு மட்டுமே வாங்கியது. ஆனால், மகாராஜா படத்திற்கான வருமானம் கிட்டத்தட்ட ரூ.150 கோடி வரை நெட்பிளிக்சிற்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் இப்படம் இந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றதே வருமானம் அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இப்படத்தை சமூக வலைத்தளங்களில் வடஇந்திய நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளினர். படத்துக்கு அதிக பார்வைகள் கிடைக்க இது பெரும் சாதகமாக அமைந்தது.