Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரச்சிதாவின் கன்னத்தை கிள்ளிய ரசிகர்: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பரபரப்பு

பெங்களூரு: தனது பிறந்தநாளில் செல்ஃபி எடுத்த ரசிகர் ஒருவர், திடீரென்று செய்த செயலால் ரச்சிதா ராம் பலத்த அதிர்ச்சி அடைந்தார். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. டி.வி தொடர்கள், வெப்சீரிஸ், திரைப்படங்கள், விளம்பரங்கள் என்று பிசியாக நடித்து வருபவர், கன்னட நடிகை ரச்சிதா ராம். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ என்ற படத்தில் வில்லியாக நடித்திருந்தார். நேற்று அவரது 34வது பிறந்தநாள்.

இதையொட்டி அவரது ரசிகர்கள் பிரமாண்டமான கட்-அவுட்டுகள் வைத்து, ரச்சிதா ராமின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். வரிசையாக வந்த ரசிகர்கள், ரச்சிதா ராமின் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஆர்வமிகுதியால் ஒரு ரசிகர் ரச்சிதா ராமுடன் செல்ஃபி எடுத்தார். பிறகு யாரும் எதிர்பாராத நேரத்தில் ரச்சிதா ராமின் கன்னத்தை கிள்ளி கொஞ்சினார். அவரது செய்கையால் பலத்த அதிர்ச்சி அடைந்த ரச்சிதா ராம், பிறகு சுதாரித்துக்கொண்டார். உடனே அந்த ரசிகரை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.