எழுத்தாளர் ராஜேஷ் குமார் கதை, திரைக்கதை எழுதும் கிரைம் திரில்லர் படம், ‘வயலெட் கனவு’. எம் 4 இண்டர்நேஷனல் வழங்க, அப்பு மூவிஸ் சார்பில் ஏ.முஸ்தரி, பாபு தூயவன் இணைந்து தயாரிக்கின்றனர். பி.நித்யானந்தன் இயக்குகிறார். ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்த விவாந்த் ஹீரோவாக நடிக்கும் இதில், ‘அங்காரன்’ ரெய்னா ஹீரோயினாக நடிக்கிறார். மற்றும் சாம்சன், ஜெகதீஷ், நிஷா, ‘யார்’ கண்ணன், ஆர்.அரவிந்தராஜ், ராம்நாத், கிரிஷ் ராவ் நடிக்கின்றனர். கீதா கரண் ஒளிப்பதிவு செய்ய, ஜெகன் கல்யாண் இசை அமைக்கிறார். ஏ.எம்.சயீப் எடிட்டிங் செய்ய, தர் அரங்கம் அமைக்கிறார். பாஸ்கர் ராஜ் வசனம் எழுத, ஏ.எக்ஸ்.என்.பிரகாஷ் சண்டைக் காட்சி அமைக்கிறார்.
‘சவால்’ ராம் நடனப் பயிற்சி அளிக்க, துரை விநாயகமூர்த்தி கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். 1,000க்கும் மேற்பட்ட கிரைம் நாவல்களை எழுதியுள்ள ராஜேஷ் குமாரின் படைப்புகள் திரைப்படங்களாகவும், வெப்தொடர்களாகவும் உருவாகும் நிலையில், அவரது முக்கியமான கிரைம் திரில்லர் நாவலை மையமாக வைத்து, ‘வயலெட் கனவு’ படம் உருவாகிறது. இதில் பணியாற்றுபவர்கள் திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் அக்டோபரில் திரைக்கு வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் விரைவில் வெளியிடப்படுகிறது.
