Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரசிகர்களுடன் ஜெயிலர் 2 படம் பார்த்த ரஜினிகாந்த்

சென்னை: சன் பிக்சர்ஸ் பிரமாண்ட தயாரிப்பில், ரஜினிகாந்த் நடித்து கடந்த 15ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள படம் ‘ஜெயிலர் 2’. நெல்சன் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகி பாபு, மிர்னா உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்துள்ளனர். முதல் வாரத்தில் ரூ.549 கோடி வசூலை பெற்று படம் புதிய சாதனையை படைத்தது.

இந்நிலையில் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள பிவிஆர் ஐமேக்ஸ் தியேட்டரில் ‘ஜெயிலர் 2’ படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்துள்ளார் ரஜினிகாந்த். நெல்சன், அனிருத், ரஜினியின் பேரன்கள் லிங்கா, யாத்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர். தியேட்டர் நிர்வாகத்தினர் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்த வரவேற்ற வீடியோ, ரசிகர்கள் அவருடன் எடுத்து கொண்ட போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளன.