Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

52வது ஆண்டில் அடியெடுத்து வைத்த ரஜினி

இந்திய திரையுலகில் ஆகஸ்ட் 15ம் தேதி என்பது ஒரு முக்கியமான நாளாகும். காரணம், அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் தனது மறக்க முடியாத பயணத்தை தொடங்கிய நாள். 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கே.பாலசந்தர் எழுதி இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படம் வெளியானது. இது இந்திய திரையுலகில் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய அற்புதமான ஒரு தொடக்கமாக அமைந்தது. திரைத்துறையில் அவர் அறிமுகமாகி 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘தர்மன்’ என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. ரஜினிகாந்த் முன்னிலை வகித்த நிகழ்ச்சி, படக்குழுவினருக்கு மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது.

இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுடன் ‘தர்மன்’ படக்குழுவினர் இணைந்து, தொடரும் இப்பயணத்தில் ‘ரஜினியிஸம்’ என்ற உத்வேகம் அளிக்கும், மகிழ்விக்கும் மற்றும் வரலாறு படைக்கும் மாபெரும் பாரம்பரியத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது சிம்ரன், ராசி கன்னா உடனிருந்தனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், டர்மெரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். இதில் டாக்டர் கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார். 52வது ஆண்டில் அவர் தனது 173வது படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.