Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ராமரை விமர்சித்துவிட்டு அவருக்கு பாடல் பாடுவதா? சின்மயிக்கு கடும் எதிர்ப்பு

சென்னை: நமித் மல்ஹோத்ராவின் பிரமாண்ட தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகி வரும் பான் வேர்ல்ட் படம் ‘ராமாயணா’. இதில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணன் கதாபாத்திரத்தில் யஷ் நடித்துள்ளனர். இதன் முதல் பாகம் வரும் தீபாவளியன்று வெளியாகிறது. ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இப்படத்துக்கான இசையை உருவாக்கி வருகின்றனர்.

இதன் முதல் சிங்கிளான ‘ஜெய் ஜெய் ராம்’ என்ற பாடல் ஸ்‌ரேயா கோஷல் குரலில் சில நாட்களுக்கு முன் இந்தியில் வெளியானது. நேற்று முன்தினம் இதன் தமிழ் பதிப்பு சின்மயி குரலில் வெளியானது. இதற்கு சின்மயி ராமர் பாடலை பாடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சோஷியல் மீடியாவில் கடும் விவாதம் நடந்து வருகிறது. முன்பு சோஷியல் மீடியாவில் ராமர் மற்றும் சீதையை குறித்து தவறான கருத்துக்களை சின்மயி பதிவிட்டதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக சீதையை, ராமர் நடத்திய விதம் குறித்து சின்மயி முன்பு பதிவிட்ட கருத்துக்களை இப்போது மீண்டும் எடுத்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். சிலர், ‘பல ஆண்டுகளாக ராமரை மிக மோசமான கணவர்’ என்று விமர்சித்துவிட்டு, வாய்ப்பு கிடைத்ததும் ‘ஜெய் ஜெய் ராமா’ என்று பாடுவது ஏற்புடையது அல்ல என்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.