Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ராம் பொதினேனியுடன் இணைந்தார் சாம் சி.எஸ்

சென்னை: தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி, தனது 23வது திரைப்படமான RAPO23 மூலம் இயக்குனராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்துள்ளார். ‘‘சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, கதையின் மனநிலையையும், பரபரப்பையும் இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் தேவைப்படும் சூழலில், சாம் சி எஸ் சரியான தேர்வாக பார்க்கப்படுகிறார்.

திரில்லர், ஆக்ஷன், சஸ்பென்ஸ், ஹாரர் என எந்த ஜானரிலும் தனக்கென ஒரு தனித்துவமான இசை மொழியை உருவாக்கியுள்ள அவர், RAPO23-க்கும் அதே தரத்தில் ஒரு புதிய இசை அனுபவத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது’’ என படக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக த்ரில்லர் படங்களில் அவர் உருவாக்கும் சவுண்ட் டிசைன் மற்றும் பின்னணி இசை, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகிறது.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’, புஷ்கர்காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத், தனுஷ் கூட்டணி படம், ‘டிமான்டி காலனி 3’ உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ராம் போதினேனியின் முதல் இயக்குனர் படமும் அவரது கைவசம் வந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.