Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வரும் 23ம் தேதி‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ்

சென்னை: அதிரடி போலீஸ் அதிகாரி வேடத்தில் கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படம் கடந்த 2006ல் திரைக்கு வந்தது. இதில் டேனியல் பாலாஜி நடித்த வில்லன் கேரக்டர் பரபரப்பாகப் பேசப்பட்டது. மற்றும் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்தனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். செவன்த் சேனல் கம்யூனிகேஷன் சார்பில் மாணிக்கம் நாராயணன் தயாரித்தார். இப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

தற்போது 17 வருடங்களுக்குப் பிறகு ‘வேட்டையாடு விளையாடு’ படம் அதிநவீன தொழில்நுட்பத்தில் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் திரையிடப்படுகிறது. வரும் 23ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் இந்தப்படத்தை ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ், கே.எம்.சுந்தரம் பிச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இந்தப் படம் மீண்டும் திரைக்கு வருவதை வரவேற்று, கமல்ஹாசனின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமென்ட் வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர்.