Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அங்கீகாரம் விமர்சனம்...

சென்னையின் விளிம்புநிலை பகுதியில், மிகவும் ஒடுக்கப்பட்ட பின்னணி கொண்ட அத்லெட் வீரர் கே.ஜெ.ஆர், காமன்வெல்த்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது. தனது லட்சியத்தில் அவர் ஜெயித்தாரா? விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள் என்ன என்பது மீதி கதை. அத்லெட் வீரராக நூறு சதவீதம் பொருந்திய கே.ஜெ.ஆர், விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த துணிச்சலை பாராட்டலாம்.

முழு படத்தையும் தோளில் தூக்கி சுமந்துள்ள அவர், கடைசிவரை லட்சியத்தில் இருந்து பின்வாங்காமல் இருப்பது, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு உற்சாக டானிக். ரமா, விஜி வெங்கடேஷ், வசுந்தரா காஷ்யப், மன்சூர் அலிகான், அஜித் கோஷி, ராம்ஜி, ரங்கராஜ் பாண்டே, ஆண்டனி, சிந்தூரி விஸ்வநாத், மோகன் ராம், அருள் டி.சங்கர் ஆகியோர் யதார்த்தமாக நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையில், கதைக்கேற்ற பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நேரடியாக விளையாட்டை பார்த்த திருப்தியை ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத் கொடுத்துள்ளார். பா.ரஞ்சித் உதவியாளர் ஜே.பி.தென்பாதியான் எழுதி இயக்கியுள்ளார். நீதிமன்ற காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.