திடீரென்று டெமாக்ரடிக் சங்கா அமைப்பில், இணை நிறுவனர் மற்றும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரெஜினா அறிவித்துள்ளார். டெமாக்ரடிக் சங்கா என்பது, ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமாகும். இந்த அமைப்பை தனது தோழியுடன் இணைந்து ரெஜினா தொடங்கினார். இந்நிலையில், வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி தான் நகர்வதாகவும், தனது பல்வேறு முக்கிய பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாலும், தற்போது அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக ரெஜினா அறிவித்துள்ளார்.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பல்வேறு மொழிப் படங்களிலும், வெப்தொடர்களிலும் பிசியாக நடித்து வரும் அவர், முன்னதாக அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் வில்லியாக நடித்திருந்தார். தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ என்ற படத்திலும் அவர் வில்லியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அவர், தான் தொடங்கிய அமைப்பில் இருந்து விலக முடிவு செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
