Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

செப்.4ல் ரிலீசாகும் 7 ஸ்டார் பாய்ஸ்

சென்னை: நிகில் பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ‘பிகில்’ ஐ.எம் விஜயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கால்பந்தாட்ட விளையாட்டு பின்னணியில் மலையாளத்தில் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’ என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி. அசோக் தமிழில் மொழி மாற்றம் செய்து செப்டம்பர் 4ம் தேதி வெளியிடுகிறார்.

படத்தை பற்றி தயாரிப்பாளர் டி. அசோக் பேசுகையில், ‘‘செவன் ஸ்டார் பாய்ஸ் - ஃபுட்பால் சம்பந்தமான ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம். இதில் கால்பந்து விளையாட வேண்டும் என தீராத ஆர்வம் கொண்ட 12 வயதிற்கு உட்பட்ட சிறார்கள், உள்ளூரில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின்போது மைதானத்தில் அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் திறமையான விளையாடும் ஆண்டனி வர்கீஸை தங்களுடைய ரோல் மாடல் நாயகனாக கருதுகிறார்கள். அதன் பின்னணியில் கதை நடக்கிறது’’ என்றார்.