Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

9ம் தேதி ரிலீசாகிறது ‘ஆல் பாஸ்’

வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், ‘ஆல் பாஸ்’. வரும் 9ம் தேதி திரைக்கு வரும் இதை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா.ஆர் தயாரித்துள்ளார். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ ஆகிய படங்களில் நடித்திருந்த துஷ்யந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இவர், குணச்சித்திர நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன். டி.வி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, பிறகு விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த ஜனனி ஹீரோயினாக நடிக்க, மற்ற கேரக்டர்களில் ஜெயப்பிரகாஷ், செந்தில்குமாரி, சுப்பிரமணியம் சிவா, வினோதினி வைத்தியநாதன், பிரசன்னா பாலசந்திரன், மோகனா.ஆர், சத்யா, சஞ்சய், கோகுல், நிகில் ஆகியோருடன் சரத் லோகித்தஸ்வா, ‘பாபநாசம்’ ரோஷன் பஷீர், ‘அருவி’ மதன், மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி நடித்துள்ளனர்.

தில் ராஜு ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன், நிலவை பார்த்திபன், ஜேம்ஸ் வசந்தன் பாடல்கள் எழுதியுள்ளனர். எஸ்.பாஸ்கர் எடிட்டிங் செய்ய, டி.ஜெயசீலன் அரங்கம் அமைத்துள்ளார். ஐ.ராதிகா நடனப்பயிற்சி அளிக்க, மெட்ரோ மகேஷ் சண்டைக்காட்சி அமைத்துள்ளார். எழுதி இயக்கியுள்ள மைதீன் கூறுகையில், ‘இது முழுநீள ஃபேமிலி சென்டிமெண்ட் கதை. வடசென்னை பின்னணியில் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பகை, கொலை போன்ற அம்சங்கள் இல்லாமல், அவர்களின் யதார்த்தமான வாழ்க்கையை படமாக்கியுள்ளோம்’ என்றார்.