Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

10 ஆண்டுகளுக்கு பின் அக். 23-ம் தேதி ரீ-ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படம்

சென்னை: திரையில் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் பல படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பல்வேறு படங்கள் இது போன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

அந்த வகையில், இயக்குநர் சீனு ராமசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான தர்மதுரை திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், சிருஷ்டி டாங்கே, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். தர்மதுரை' படத்தில் இடம்பெற்ற 'எந்தப் பக்கம்' இந்தப் பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு 64 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளியாகி சுமார் 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், வருகிற அக்டோபர் 23-ம் தேதி 'தர்மதுரை' திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. இதேவேளையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'பத்தா' திரைப்படமும் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.