Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனம்: 4 இடியட்ஸ்

மருத்துவர் வின்சென்ட் அசோகனுக்கு சொந்தமான கடற்கரை பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாக தகவல் கசிகிறது. இத்தகவலை அறிந்துகொள்ளும் திருடர்களான புகழ், ‘கும்கி’ அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய 4 பேரும் அதை கொள்ளையடிக்க திட்டம் போட்டு பங்களாவுக்குள் நுழைகின்றனர் அதன் பிறகு நடப்பதே மீதி கதை. ஹீரோ புகழிடம் ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் காமெடி ஒன்று கூட ஒர்க் அவுட் ஆகவில்லை. புகழுடன் கூட்டணி அமைத்திருக்கும் ‘கும்கி’ அஷ்வின், திடியன், இந்திரன் ஆகியோரது நிலை புகழை விட பரிதாபம். யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். சுபாஷ் முனிரத்னம் இசையில் பாடல்க நலம். எழுதி இயக்கியிருக்கும் சஜோ சுந்தர் முருகேசன், இன்னும் மெனக்கெட்டிருந்தால் சிரிப்பு சரவெடியாக வெடித்திருக்கும்.