அமெரிக்காவில் பணியாற்றும் காதல் ஜோடி விஜய் விஷ்வா, அர்ச்சனா குமார். இவர்களில் அர்ச்சனா குமாரின் பெற்றோரான குரு சோமசுந்தரம், அனுமோல் ஆகியோர் சென்னையில் வசிக்கின்றனர். அரசு மருத்துவராக பணியாற்றும் குரு சோமசுந்தரமும், நேர்மைக்காக போராடும் சமூக சேவகி அனுமோலும் காதல் திருமணம் செய்தவர்கள். இந்நிலையில், திடீரென்று தந்தையை விட்டு தாய் பிரிந்துவிட்டதாக தகவல் கிடைக்க, அதை நம்பாத அர்ச்சனா குமார், அமெரிக்காவில் இருந்து விஜய் விஷ்வாவுடன் சென்னைக்கு வருகிறார். அதன் பிறகான சம்பவங்களே மீதி கதை.
ஒவ்வொருவரும் ஒரு கொள்கைக்காக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எழுதி இயக்கியுள்ளார், புதியவர் சராஜ் சீலன். நேர்மையான அரசு மருத்துவராக குரு சோமசுந்தரம், தனது வழக்கமான ஸ்டைலில் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். அனுமோல் சிறப்பாக நடித்துள்ளார். விஜய் விஷ்வாவுக்கும், அர்ச்சனா குமாருக்குமான லவ் கெமிஸ்ட்ரி ஸ்ட்ராங்காக இருக்கிறது. சாய் விக்கி, நயனா சாய், பிபின் குமார் ஆகியோரும் யதார்த்தமாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளனர். சதீஷ்.ஜி ஒளிப்பதிவு தரமாகவும், கே பின்னணி இசை பலமாகவும் இருக்கிறது. இயக்குனர் சராஜ் சீலன், ஆணவக்கொலை சப்ஜெக்ட்டை தாண்டி புதிதாக யோசித்து இருக்கலாம்.
