பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மேக்கரை கிராமத்தில் வாழ்ந்த வனமங்கையை தசரதன் என்பவர் காதலித்தார். ஆனால், தனது காதலியின் கற்பு மீது சந்தேகப்பட்டு எரித்துவிடுகிறார். அப்போது வனமங்கை விடுத்த சாபம், இப்போது ஒவ்வொரு ஜூன் மாதமும் தொடர்ச்சியாக கொலைகள் நடக்கிறது. அந்த கொலையாளி யார்? அவன் சிக்கினானா என்பது மீதி கதை.
படம் முழுக்க மர்ம முடிச்சுகளை போட்டு, இவர்தான் கொலையாளியாக இருப்பாரோ என்று நம்ப வைப்பதிலேயே இயக்குனர் பாலாஜி பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார். போலீஸ் அதிகாரியாக தீவிர விசாரணை நடத்தும் சித்து, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரித்விகா, கச்சிதம். தர்ஷிகாவும் சிறப்பாக நடித்துள்ளார். பிரதீப், ஜெயகுமார், வேல.ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர், சத்யா, சாப்ளின் பாலு ஆகியோரின் நடிப்பு கவனத்தை ஈரக்கிறது.
பி.ேக.மணிகண்டனின் ஒளிப்பதிவு, அமானுஷ்ய திரில்லருக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சக்தி பாலாஜியின் பின்னணி இசை, இன்னொரு ஹீரோவாக படத்தை தாங்கி நிற்கிறது. பரபரப்பாக தொடங்கும் படத்தை, இரண்டாம் பாதியிலும் கவனித்திருக்கலாம். ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் இருக்கின்றன.
