Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரியா சக்ரவர்த்தியை கேலி செய்த மல்லிகா ஷெராவத்

மும்பை: பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் விவகாரத்தில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்த அவரது காதலி நடிகை ரியா சக்ரவர்த்தி (32), நடிகை மல்லிகா ஷெராவத் (48), நடிகர் சாஹில் சலாத்தியா உள்பட பலர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் ரியா சக்ரவர்த்தியை சீண்டும் விதமாக பேசிய மல்லிகா ஷெராவத், ‘மீண்டும் திரைக்கு வருவதற்கான போட்டியா? ரியா, நீங்கள் ஏற்கனவே சிறையில் இருந்தீர்கள். இந்த நிகழ்ச்சி உங்களுக்கு மறுபிரவேசமா?’ என்று கேலி செய்தது, சக போட்டியாளர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் மல்லிகாவை சோஷியல் மீடியாவில் கண்டித்து வருகிறார்கள்.