Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நாகேஷ் பேரனுக்கு ஜோடியானார் ரித்விகா ஸ்ரேயா

சென்னை: ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க பத்மராஜு ஜெய்சங்கர் தயாரித்திருக்கும் படத்திற்கு ‘உருட்டு உருட்டு’ என்று பெயரிட்டுள்ளனர். நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் பாஸ்கர் சதாசிவம் கூறியது:

25, 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற விளம்பரம் பிரபலமாக இருந்தது, அதுவே கொஞ்ச நாட்கள் கழித்து நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாறியது, ஆனால் தற்போது அந்த விளம்பரங்கள் எங்கேயும் பார்க்க முடிவதில்லை பதிலாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா எங்கள் மருத்துவமனைக்கு வாங்க என்று அனைத்து மாவட்டத்திலும் உள்ள நகராட்சி, ஊராட்சி என எல்லா இடங்களிலும் கருத்தரிப்பு மையங்களை மட்டுமே காண முடிகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நகைச்சுவை கலந்து இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஏற்றார் போல் சொல்கிறோம்.