Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காமெடி கலந்த காதல் கதை

சென்னை: ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் மை இந்தியா வி.எஸ்.மாணிக்கம் தயாரிக்கும் படம் புரொடக்ஷன் நம்பர் 2 (தற்காலிக தலைப்பு) கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஜெயபிரகாஷ் ரங்கசாமி. இசையமைப்பாளர் - ஜுபின். ஒளிப்பதிவு - ஸ்ரீ ராம். ஜெயேந்திரா விஜய், எடிட்டர். கதாநாயகன், கதாநாயகி, கேரக்டர் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நாற்காலி கார்த்திக் நடிக்கிறார்.

அவருடைய கேரக்டர் இந்த படத்தில் அழுத்தமாக இருக்கும் என டைரக்டர் ஜெயபிரகாஷ் ரங்கசாமி கூறுகிறார். அவர் மேலும் கூறும்போது, ‘‘ஒரு 3 கோடி ரூபாய் பணம், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு போக வேண்டும். பணத்தை கொடுப்பவரும் இறந்துவிடுகிறார். அதை வாங்குவதற்கு முன் வாங்க வேண்டியவரும் இறந்துபோகிறார். ரூ.3 கோடியை நாற்காலி கார்த்திக் எப்படி கையாள்கிறார் என்ற வலுவான கேரக்டர் படத்தில் இடம்பெறுகிறது. இன்றைய காலத்துக்கு ஏற்ற காதல் கதையை மையமாக வைத்து காமெடியும் கலந்த படமாக உருவாக்கியுள்ளேன். சென்னை சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளோம்’’ என்றார்.